கடலைப்பருப்பு சுண்டல்

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு - ஒரு கப்

தேங்காய் -  அரை மூடி

பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

உப்பு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

மேல்பொடி செய்ய:

கடலைப்பருப்பு, தனியா,  தலா 2  ஸ்பூன் காய்ந்த மிலகாய் - 3   (கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் மூன்றையும் தனித்தனியாக வறுத்து சற்று கரகரப்பாக பொடித்து வைக்கவும்)

செய்முறை:

தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் எடுத்து வைக்கவும். கடலைப்பருப்பை மூழ்கும் அளவு நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். அதனுடன் வேக வைத்து எடுத்த பருப்பை போட்டு, மேல் பொடியைத் தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கி விடவும்.

Related Stories: