வேலூர் மாவட்ட காவல் துறையில் 11 ஆண்டுகளாக பணியாற்றிய மோப்ப நாய் ஓய்வு: காவலர்கள் கேக் வெட்டினர்

வேலூர்: வேலூர் காவல் துறையில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்த மோப்ப நாய் லூசி ஓய்வு பெற்றது. இதையொட்டி மோப்பநாய்க்கு மாலை அணிவித்து காவலர்கள் கேக் வெட்டினர்.வேலூர் மாவட்ட மோப்ப நாய் படை பிரிவில் கடந்த 2011ம் ஆண்டு லூசி என்ற மோப்ப நாய் சேர்க்கப்பட்டது. வெடிகுண்டு சோதனை பிரிவில் கடந்த 11 ஆண்டுகளாக லூசி மோப்ப நாய் பல சாதனைகள் புரிந்துள்ளது. மேலும் கடந்த 2014ம் ஆண்டு மாநில அளவிலான துப்பறியும் நாய்களின் வெடிகுண்டு சோதனை செய்யும் போட்டியில் 2ம் இடம் பிடித்து சில்வர் பதக்கத்தையும் பெற்றுள்ளது. இந்நிலையில், மே 31ம் தேதியுடன் 11 ஆண்டுகள் நிறைவு பெற்ற மோப்ப நாய் லூசி நேற்றுடன் ஓய்வு பெற்றது. இதையடுத்து, மோப்ப நாய் பிரிவில் லூசியை கவுரவிக்கும் வகையில் பணி நிறைவு விழா நடந்தது. அப்போது 11 ஆண்டு பணி நிறைவை கொண்டாடும் வகையில் காவலர்கள் மோப்பநாய்க்கு மாலை அணிவித்து கேக் வெட்டினர். தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற கூட்டங்களில் வெடிகுண்டு குறித்த சோதனையில் லூசி நாய் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. …

The post வேலூர் மாவட்ட காவல் துறையில் 11 ஆண்டுகளாக பணியாற்றிய மோப்ப நாய் ஓய்வு: காவலர்கள் கேக் வெட்டினர் appeared first on Dinakaran.

Related Stories: