அரிமளம் அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

திருமயம்: அரிமளம் அருகே நடைபெற்ற அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டி கரைமேல் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக கே.புதுப்பட்டி அருகே உள்ள கொசவப்படடியில் மண்ணாலான 45 குதிரைகள் செய்யப்பட்டது.

விழாவையொட்டி பக்தர்கள் மண் குதிரைக்கு வர்ணம் பூசி, பூ மாலையால் அலங்கரித்து கொசவப்பட்டியில் இருந்து அய்யனார் கோயில் வரை மேலா தாளத்துடன் தோளில் சுமந்து வந்தனர். விழாவையொட்டி இரவு கோயில் அருகே உள்ள கலையரங்கில் புராண நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவைக்கான சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கே.புதுப்பட்டி, ஏத்தநாடு, கரையப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: