கல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. கடந்த மாதம் 26ம் தேதி இரவு பூச்சொரிதல் விழாவுடன் ஆவணித் திருவிழா தொடங்கியது. அன்று இரவே காப்புக்கட்டப்பட்டது. 27ம் தேதி அக்னிப்பால்குட விழா நடைபெற்றது. தொடர்ந்து தினசரி மண்டகப்படி நடைபெற்று வந்தது. முக்கிய விழாவான பொங்கல் விழா நேற்று 3ம் தேதி மற்றும் நேற்றைய முன்தினம் என 2 நாட்கள் நடைபெற்றது.

Advertising
Advertising

விழாவையொட்டி கோயில் முன் பொங்கலிட்டு கோழி, கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கல்லம்பட்டி, நகரப்பட்டி, வடக்கிப்பட்டி, சங்கம்பட்டி, மேலக்கல்லம்பட்டி, மூக்கழகன்பட்டி, மேட்டாம்பட்டி, பனையமங்களப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் இதில் பங்குபெற்று வழிபாடு செய்தனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: