இந்த வாரம் என்ன விசேஷம்?

செப்டம்பர் 1, சனி  

Advertising
Advertising

திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம். பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு.

செப்டம்பர் 2, ஞாயிறு  

கிருஷ்ண ஜெயந்தி. வைகானஸ முனித்ரய ஸ்ரீஜெயந்தி. பாஞ்சராத்ர ஜெயந்தி. கார்த்திகை விரதம்.

செப்டம்பர் 3, திங்கள்  

திதித்வயம். பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 4, செவ்வாய்  

தசமி. ஸ்ரீரங்கம் உரியடி, மன்னார்குடி உரியடி திருவள்ளுர் உறியடி உற்சவம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயில் ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 5, புதன்  

ஏகாதசி. திருச்செந்தூர் ஷண்முகர் சிவப்பு சாத்தி தரிசனம்.

செப்டம்பர் 6, வியாழன்  

சர்வ ஏகாதசி.. ஸ்ரீரங்கம் நம் பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. வேளூர் ஸ்ரீவினைதீர்த்த விநாயகர் உற்சவாரம்பம். திருச்செந்தூர் ஷண்முகர் பச்சை சாத்தி தரிசனம். கும்பகோணம் ஸ்ரீராமர் திருக்கல்யாணம்.

செப்டம்பர் 7, வெள்ளி  

துவாதசி. திரயோதசி. பிரதோஷம். செருத்துணையார். திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்கக் கைலாச பர்வத வாகனத்தில் திருவீதியுலா. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கமல வாகனத்தில் புறப்பாடு.

Related Stories: