இந்த வாரம் என்ன விசேஷம்?

ஆகஸ்ட் 25, சனி  

சதுர்த்தசி. பெளர்ணமி. ரிக் உபா கர்மா. கும்பகோணம் ஸ்ரீராமர் பவித்ர உற்சவ கருட சேவை. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்

25.8.2018 மாலை 4.02 PM முதல் 26.8.2018 மாலை 5.45 PM வரை. திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்.

ஆகஸ்ட் 26, ஞாயிறு  

ஆவணி அவிட்டம். யஜுர் உபாகர்மா. திருவேடகம் ஏடகநாத சுவாமி திருப்பாசுர ஏடுஎதிர் ஏறிய லீலை திருவள்ளூர் பவித்ர உற்சவாரம்பம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷபாரூட தரிசனம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.

ஆகஸ்ட் 27, திங்கள்  

காயத்ரி ஜபம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

ஆகஸ்ட் 28, செவ்வாய்  

சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

ஆகஸ்ட் 29, புதன்  

மகா சங்கடஹர சதுர்த்தி. திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் நரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சன சேவை,

ஆகஸ்ட் 30, வியாழன்  

திண்டுக்கல் சத்குரு சாது ஸ்ரீகருணாம்பிகை அம்மையார் குருபூஜை. திருச்செந்தூர், பெருவயல் தலங்களில் கொடியேற்றம். உற்சவாரம்பம்.

ஆகஸ்ட் 31, வெள்ளி.

சஷ்டி. திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்கக் கேடய சப்பரத்தில் பவனி. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதிப் புறப்பாடு.

Related Stories: