ஆடி பால்

என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,

சர்க்கரை - 1 கப்,

சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்,

பாதாம் - 50 கிராம்,

வெள்ளரி விதை - 1/2 டேபிள்ஸ்பூன்,

ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - தலா 1/4 டீஸ்பூன்,

அலங்கரிக்க பாதாம், பிஸ்தா சீவல் - தேவைக்கு ஏற்ப.

எப்படிச் செய்வது?

பாதாமை தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து மிக்சியில் நைசாக அரைக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி ஆறவைத்து அதில் பாதாம் விழுது, சோம்பு, சர்க்கரை,

ஏலக்காய்த்தூள் கலந்து, மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி பாதாம், பிஸ்தா சீவல், வெள்ளரி விதை, குங்குமப்பூ தூவி பரிமாறவும். விரும்பினால் சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து ஊற்றி கொதிக்க விடலாம்.

Related Stories: