தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் தீபிகா

மும்பை: பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான தீபிகா படுகோன், தமிழில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் கேப்சரிங் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார். அவர் இந்தியில் நடித்த சில படங்கள் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், தெலுங்கில் முதல்முறையாக அவர் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ என்ற பான் இந்தியா படத்தை ‘மகாநடி’ நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.

1,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் கதை கொண்ட இப்படத்துக்காக தீபிகா படுகோன் தெலுங்கில் டப்பிங் பேசுகிறார். இதற்காக அவருக்கு தெலுங்கில் பேச விசேஷ பயிற்சி அளிக்கப்படுகிறது. பாலிவுட் முன்னணி ஹீரோ ரன்வீர் சிங்கின் காதல் மனைவியான அவர், கடந்த மாதம் தனது கர்ப்பம் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார்.

 

The post தெலுங்கில் டப்பிங் பேசுகிறார் தீபிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: