எல்லையம்மன் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா

பள்ளிகொண்டா: வெட்டுவாணம் எல்லையம்மன் கோயிலில் பிரமோற்சவத்தை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி  உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணத்தில் எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த 4ம் தேதி  கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. இதையொட்டி நேற்றுமுன்தினம் புஷ்ப பல்லக்கில் உற்சவ சுவாமி முக்கிய வீதிகளில்  வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை சிறப்பு யாக சாலைகளும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வடிவேல் துரை, எழுத்தர் பாபு மணியம் முரளி மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: