750 நாள் கொண்டாடிய விடிவி

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா (விடிவி). இப்படம் வெளியாகி 14 வருடம் கடந்துவிட்டது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பலமாக அமைந்தது. இதையடுத்து, இந்த படத்தை ரீ ரிலிஸ் செய்தார்கள். மீண்டும் படம் ரிலீசானதில் சென்னையிலுள்ள ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 750 நாட்கள் கடந்து ஓடி வருகிறது. மறு ரிலீசில் அதிக நாட்கள் ஓடிய படமாக ஷாருக்கானின் தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விண்ணைத்தாண்டி வருவாயா இடம்பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மறு ரிலீஸ் செய்வது இப்போது டிரெண்டாகி வருகிறது. 96, வாலி, கில்லி, நாயகன், வேட்டையாடு விளையாடு உள்பட பல படங்கள் ரீரிலீஸ் ஆகி வருகிறது.

The post 750 நாள் கொண்டாடிய விடிவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: