மணமேல்குடி உஜ்ஜயினிமாகாளியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

மணமேல்குடி: மணமேல்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி அம்மன் பல வகையான காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மணமேல்குடியில் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் இப்பகுதியில் பிரசித்து பெற்றது. இக்கோயிலில் ஆடி மாதத்தையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மேலும் ஆடித்திருவிழாவையொட்டி பலவகையான காய்கறிகளைக்கொண்டு அம்மன் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனைகள் நடந்தன. இந்த காய்கறி அலங்கார சேவையை ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் செல்கின்றனர். விழா அலங்கார ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சங்கரன் சுவாமிகள் செய்திருந்தார்.

Related Stories: