இந்த வாரம் என்ன விசேஷம்?

ஆகஸ்ட் 4, சனி   

Advertising
Advertising

வேளூர், சீர்காழி, திருக்கடவூர், திருவையாறு, நாகை, மதுரை தலங்களில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம். ராமேஸ்வரம், நாகப்பட்டினம், திருவாடானை நயினார் கோவில் இத்தலங்களில் உற்சவாரம்பம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பக விமானத்தில் பவனி. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை.

ஆகஸ்ட் 5, ஞாயிறு  

ஆடிக் கிருத்திகை. மூர்த்தியார். புகழச்சோழர். திருத்தணி தெப்பம். சென்னை  குரோம்பேட்டை குமரன்குன்றம் ஆடிக்கிருத்திகை உற்சவம் ஆரம்பம். கார்த்திகை விரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிரம்மோற்சவாரம்பம். பதினாறு வண்டிச் சப்பரத்தில் பவனி.

ஆகஸ்ட் 6, திங்கள்  

வேளூர் கிருத்திகை. ராமேஸ்வரம் பர்வத வர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கு, இரவு தங்கக் கேடயத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திரப்பிரபையிலும் ரங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா.

ஆகஸ்ட் 7, செவ்வாய்  

ஏகாதசி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் சக்தி அழைப்பு விழா. உருள் தாண்டவக் காட்சி. நாகப்பட்டினம் நீலாயதாக்ஷியம்மன் பெரிய கிளி வாகனத்தில் பவனி, மாலை வேணுகோபாலர் அலங்காரம்.

ஆகஸ்ட் 8, புதன்   

கூற்றுவனார். ஸ்ரீகாஞ்சி ஆசார்யாள் மடத்தில் வைதீக பிக்ஷாவந்தனம். நயினார்கோவில் ஸ்ரீ செளந்திரநாயகி வேணுகான கிருஷ்ணமூர்த்தி அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷவாகனத்திலும் ரங்கமன்னார் கோவர்த்தனகிரியிலும் பவனிவரும் காட்சி.

ஆகஸ்ட் 9, வியாழன்   

பிரதோஷம். மாதசிவராத்திரி. சென்னை சைதை காரணீஸ்வரர் கோயிலில் ஸ்வர்ணாம்பிகை தேவிக்கு ஆடிப்பூர லட்சார்ச்சனை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வத வர்த்தினியம்மன் தங்க ரிஷப சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் பவனி.

ஆகஸ்ட் 10, வெள்ளி  

போதாயன அமாவாசை. பழநி பெரியநாயகியம்மன் வெள்ளித்தேர். திருக்கழுக்குன்றம் திருத்தேர். திருவஹிந்த்ரபுரம், சிங்கிரி தலங்களில் பூலங்கி சேவை. தருமை ஸ்ரீமகாலட்சுமி துர்க்காம்பிகை சந்நதியில் திருவிளக்கு பூஜை. ஆழ்வார்குறிச்சி சிவசைலநாதர் நந்தி சந்தனக்காப்பு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் பெருந் திருவிழா, திருவாடானை சிநேகவல்லியம்மன் வெண்ணெய்த்தாழி சேவை. இரவு கமல வாகனத்தில் பவனி. சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் ரதோற்சவம். திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் காலை 11 மணிக்கு புற்றலங்காரம். நவ கலசாபிஷேகம்.

Related Stories: