திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பிரமோற்சவ விழா துவக்கம்: 9ம் தேதி தேரோட்டம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவானின் ஆலயமான தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிமரத்து கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம்  நடைபெற்றது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடந்தது.ஜூன் 2ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு, 3ம் தேதி இரவு செண்பக தியாகராஜ சுவாமி உன்மத்த நடனமாடி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும் காட்சி நடக்கிறது. 7ம் தேதி பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 9ம் தேதி தேரோட்டமும், 10ம் தேதி சனி பகவான் தங்கக் காக வாகனத்தில் வீதியுலாவும், 11ம் தேதி தெப்போற்சவமும் நடக்கிறது….

The post திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பிரமோற்சவ விழா துவக்கம்: 9ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: