தியாகராஜ சுவாமி கோயிலில் சுந்தரர், பரவை நாச்சியார் திருக்கல்யாண வைபவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற சுந்தரர். பரவை நாச்சியார் திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 63 நாயன்மார்களில் ஒருவரும், இறைவனின் நண்பர் என்றும் அழைக்கப்படுபவர் சுந்தரர் சுவாமிகள். இவருக்கும் பரவை நாச்சியாருக்கும் ஆண்டு தோறும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் 2ம் பிரகாரத்தில் உள்ள தட்டஞ்சுத்தி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக திருவாரூர் நாலுகால் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை அழைப்பு என்ற பெயரில் சுந்தரர் சுவாமிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட நிலையில், கோயிலின் தெற்கு கோபுரம் அருகே உள்ள மண்டபத்திலிருந்து பரவை நாச்சியார் அழைத்து வரப்பட்டார். பின்னர் இருவருக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: