ஜூலை 7, சனி
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை, ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு அபிஷேகம்.
ஜூலை 8, ஞாயிறு திருவண்ணாமலை, திருவையாறு தலங்களில் சிவபெருமான் அயன உற்சவாரம்பம்.
ஜூலை 9, திங்கள் ஸர்வ ஏகாதசி. கார்த்திகை விரதம். திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமத்தில் மாத்ரு பூதேஸ்வரர் பூஜை. திருவையாறு சிவபெருமான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. வேளூர் கிருத்திகை.
ஜூலை 10, செவ்வாய் பிரதோஷம். சகல சிவாலயங்களிலும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு. மன்னார்குடி ராஜகோபால் ஸ்வாமி புறப்பாடு. திருவண்ணாமலை சிவபெருமான் பவனி. கூர்ம ஜெயந்தி. மயிலாடுதுறை சோழம்பேட்டை வானமுட்டிப் பெருமாள் ஸம்வத்ஸராபிஷேகம்.
ஜூலை 11, புதன் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை, திருப்பதி ஏழுமலையப்பன் ஸஹஸ்ர கலசாபிஷேகம். மாத சிவராத்திரி.
ஜூலை 12, வியாழன் சர்வ அமாவாசை. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம். திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல். திருவண்ணாமலை, திருவையாறு தலங்களில் சிவபெருமான் ரிஷப வாகன சேவை. மயிலம் முதற்பட்டம் பாலசித்தர் குருபூஜை
ஜூலை 13, வெள்ளி பிரதமை. ராமநாதபுரம் கோதண்டராம ஸ்வாமி உற்சவாரம்பம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. பத்ராசலம் ராமபிரான் பவனி.