விஷ்ணு விஷாலை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்

சென்னை: விஷ்ணு விஷால், நடித்துள்ள ’லால் சலாம்’ திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அவருடன் இன்னொரு நடிகர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அருண் ராஜா காமராஜ் ஏற்கனவே ’கனா’ ’நெஞ்சுக்கு நீதி’ ஆகிய திரைப்படங்களையும் ’லேபிள்’ என்ற ஹாட்ஸ்டார் வெப் தொடரையும் இயக்கிய நிலையில் அவருடைய அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் ஹீரோயின், மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post விஷ்ணு விஷாலை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: