அதுல தெளிவா இருக்கேன்: விஷ்ணு விஷால்

சென்னை: சினிமாவுக்கு வந்து 15 வருடம் ஆனதையடுத்து விஷ்ணு விஷால் கூறியது: என் முதல் படமான ‘வெண்ணிலா கபடி குழு’ வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த என் இயக்குனர் சுசீந்திரனுக்கு நன்றி. திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன். எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எந்தவித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது திரைப்படங்கள் மக்களிடம் பாஸிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் பெருமைப்படுகிறேன்.

The post அதுல தெளிவா இருக்கேன்: விஷ்ணு விஷால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: