3வது முறை இணைந்த தேவிஸ்ரீ பிரசாத்

ஐதராபாத்: தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் தேவி பிரசாத், பல்வேறு மொழிகளில் இசை அமைத்து வருகிறார். அவ்வப்போது சில பாடல்களைப் பாடியும், தனி இசை ஆல்பங்கள் வெளியிட்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். தற்போது அவர் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்துக்கு இசை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை சேகர் கம்முலா இயக்குகிறார்.  வெங்கடேஸ்வரா சினிமாஸ், அமிகோஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகும் இப்படத்தின் மூலம் தேவி பிரசாத், சேகர் கம்முலா முதல்முறையாக இணைகின்றனர். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். ‘குட்டி’, ‘வேங்கை’ ஆகிய படங்களுக்குப் பிறகு 3வது முறையாக தனுஷுடன் தேவி பிரசாத் இணைந்துள்ளதால், அவர்களது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

The post 3வது முறை இணைந்த தேவிஸ்ரீ பிரசாத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: