ஆக்ஷனில் எனது சிறந்த திறனை வெளிக்கொண்டு வர இந்தப்படம் மூலம் ஒரு தளம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இருவரும் நிறைய கதைகளை பற்றி பேசியுள்ளோம். ஆரம்பத்தில், அவர் தனது பாணியில் ஒரு காதல் கதையை சொன்னார். ஒரு வாரம் கழித்து, உணர்ச்சிப்பூர்வமான பொழுதுபோக்குடன் கூடிய ஆக்ஷன் கதை சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார். திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு படத்தில் ஒன்றாக வேலை செய்வோம் என்று அவர் என்னிடம் கூறினார். ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் ஆக்ஷன், எமோஷன் மற்றும் சென்டிமெண்ட் ஆகியவை இருக்கும். குறிப்பாக, என் கதாபாத்திரத்திற்கும் மகள் இயலுக்கும் இடையே உள்ள உணர்வுபூர்வமான பிணைப்பு பார்வையாளர்களின் இதயங்களை தொடும்.
The post ஆக்ஷனை திணிக்கவில்லை: அருண் விஜய் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.