தமிழ்நாட்டில் 101க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவில் வல்லுநர் குழுக் கூட்டம் நடைபெற்றது.!

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்புப் பணிக்கான ஒப்புதலுக்கு பரிந்துரை செய்வதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழுவின் 25-வது கூட்டம் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் எந்தவித திருப்பணிகளும் நடைபெறவில்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடைபெற்று வந்த மாநில வல்லுநர் குழு கூட்டம் இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வாரம் இரண்டு முறை இக்கூட்டம் நடத்தப்பட்டு சுமார் 120 க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணி செய்ய அவற்றின் பழமை மாறாது புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டல அளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ள மாநில அளவில் வல்லுநர் குழுவால் பரிசீலனை செய்யப்பட்ட திருக்கோயில்களான  கன்னியாகுமாரி, ஈசாந்திமங்கலம், அருள்மிகு பஞ்சநந்தீஸ்வரர் திருக்கோயில்,  மணலிக்கரை, அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், மதுரை ராஜாமில் ரோடு, அருள்மிகு மகாதேவசுவாமி திருக்கோயில், சிம்மக்கல், அருள்மிகு விநாயகர் திருக்கோயில், முள்ளிப்பள்ளம், அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், கல்லூரணி, அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், வல்லம், அருள்மிகு பள்ளத்தூர் அய்யனார் திருக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், கருவாழக்கறை, அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர்  திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், கருப்பூர், அருள்மிகு அய்யனார் திருக்கோயில், மானத்தங்குடி,அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர்  திருக்கோயில் திருப்பூர் மாவட்டம். பெருமாநல்லூர், அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், நாமக்கல் மாவட்டம், சின்னதம்பிப்பாளையம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பொம்மலப்பாலயம், அருள்மிகு வைத்தீஸ்வரன் திருக்கோயில் ஈரோடு மாவட்டம், வாணிப்புத்தூர், அருள்மிகு மாதேஸ்வரசுவாமி திருக்கோயில், சேலம் மாவட்டம் அருள்மிகு லட்சுமி நாராயணசுவாமி திருக்கோயில். எம்.பெரும்பாளையம், அருள்மிகு கோதண்டராமசுவாமி திருக்கோயில் கள்ளக்குறிச்சி மாவட்டம், பெத்தனூர், அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில், அரகண்டநல்லூர்,  அருள்மிகு தேரடி விநாயகர் திருக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம், பர்வதமலை, அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில்  வேலூர் மாவட்டம், துதிப்பேட்டை, அருள்மிகு பிந்துமாதவராயசுவாமி திருக்கோயில், ஒலக்காசி, அருள்மிகு ராமர் பஜனை திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், வெண்மணியாத்தூர், அருள்மிகு கொஞ்சுமலை மாரியம்மன் திருக்கோயில், திண்டிவனம், பெலாக்குப்பம், அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில், ஆவணிப்பூர்,  அருள்மிகு பொன்னியம்மன் திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம், எம்.தெற்கு தெரு. அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் உட்பட 101 திருக்கோயில்களுக்கு ஆகம விதிபடி திருப்பணிகள் மேற்கொள்ள பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிசீலனைக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். திருப்பணிகள் முடிவுற்றவுடன் திருக்குடமுழுக்கு நடத்தப்படும். இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் திரு.ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் திரு. கே.சந்திரசேகர் பட்டர் (ராஜா), திரு.கோவிந்தராஜ பட்டர், திரு.அனந்த சமய பட்டாச்சாரியார், தலைமை பொறியாளர் திரு.தட்சிணாமூர்த்தி, தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் திரு.கே.முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் முனைவர் கே.மூர்த்திஸ்வரி, முனைவர் சீ.வசந்தி, திரு. சத்தியமூர்த்தி, முனைவர் கே. இராமமூர்த்தி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்….

The post தமிழ்நாட்டில் 101க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவில் வல்லுநர் குழுக் கூட்டம் நடைபெற்றது.! appeared first on Dinakaran.

Related Stories: