2 பாகங்களாக உருவாகிறது ஜூனியர் என்டிஆர் படம்

ஐதராபாத்: வித்தியாசமான தோற்றத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் பான் இந்தியா படம், ‘தேவரா’. இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். வில்லனாக சைப் அலிகான் நடிக்கிறார். இப்படத்தை 2 பாகங்களாக உருவாக்கி வரும் இயக்குநர் கொரட்டாலா சிவா, ‘தேவரா பார்ட் 1’ படத்தை வரும் ஏப்ரல் 5ம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரையிடுகிறார். சமீபத்தில் ‘தேவரா’ உலகை அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. தேவரா கேரக்டரில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார்.
என்டிஆர் ஆர்ட்ஸ், யுவசுதா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தை நந்தமூரி கல்யாண் ராம் வழங்குகிறார். மிக்கிலினேனி சுதாகர், ஹரி கிருஷ்ணா.கே தயாரிக்கின்றனர். முக்கிய வேடங்களில் பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த் மேகா, டாம் ஷைன் சாக்கோ, நரேன் நடிக்கின்றனர்.

The post 2 பாகங்களாக உருவாகிறது ஜூனியர் என்டிஆர் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: