டிக் டாக் படத்திலிருந்து 20 நிமிட காட்சிகளை காணோம்: தயாரிப்பாளர் புகார்

 

சென்னை: தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் டிக் டாக் படத்திலிருந்து 20 நிமிட காட்சிகளை காணவில்லை என தயாரிப்பாளர் புகார் கூறியுள்ளார். இந்த வினோதமான பிரச்னை குறித்து படத்தின் தயாரிப்பாளர் மதன் குமார், நிர்வாக தயாரிப்பாளர் பிரபு சதீஷ், பட ஹீரோ ராஜாஜி ஆகியோர் அளித்த பேட்டி: இந்த படத்துக்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்கவில்லை. கிடைத்த பல தியேட்டர்களில் 20 நிமிடம் 42 நொடிகள் ஓடும் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. டான், டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா மோகன் இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள், அவரது பாடல் காட்சிகள் உள்பட 4வது ரீல் படத்தில் இல்லை. இது பற்றி படத்தில் பணியாற்றிய டிஎஸ்ஆர் கியூப் நிறுவனத்திடம் பேசினோம். இது தொழில்நுட்ப கோளாறு என சாதாரணமாக கூறுகிறார்கள். அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறோம்.

The post டிக் டாக் படத்திலிருந்து 20 நிமிட காட்சிகளை காணோம்: தயாரிப்பாளர் புகார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: