மங்கை பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்க, குபேந்திரன் காமாட்சி இயக்கும் படம், ‘மங்கை’. பெண்மையின் பெருமையைப் பறைசாற்றும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெற்றிமாறன், அமீர், விஜய் சேதுபதி வெளியிட்டனர். வெற்றிமாறன் மற்றும் தங்கம் கதையில், அமீர் இயக்கத்தில் அசார், மைதீன் நடிக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’, தவிர வசந்த் ரவி நடிக்கும் ‘இந்திரா’ ஆகிய படங்களை ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ‘மங்கை’ படம் குறித்து குபேந்திரன் காமாட்சி கூறுகையில், ‘இதில் ‘கயல்’ ஆனந்தி, துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் நடிக்கின்றனர். சசிகுமார் இயக்கிய ‘ஈசன்’ படத்தில் நடித்த துஷி, தயாரிப்பாளரும் மற்றும் தமிழ், தெலுங்கில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பவருமான ஜெயப்பிரகாஷின் மகனாவார். ‘மங்கை’ படம் பெண்ணைப் பற்றிய ஆணின் பார்வையைப் பேசும் விதமாகவும், ஒரு பயணத்தில் பெண் சந்திக்கும் நிகழ்வுகளைப் பற்றி சொல்லும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மூணாறு, பூப்பாறை, தேனி, கம்பம், கூடலூர், லோயர் கேம்ப், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் ஆடியோ வெளியாகிறது. மார்ச் மாதம் படம் திரைக்கு வருகிறது’ என்றார்.

The post மங்கை பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: