கோலிவுட்டில் அறிமுகமாகிறார் கேத்ரினா கைஃப்

மும்பை: இந்தி மற்றும் தமிழில் விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப் நடித்துள்ள படம், ‘மேரி கிறிஸ்துமஸ்’. இதன் டைட்டிலில் கிறிஸ்துமஸ் என்றிருப்பதால், கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் திரைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் அது முடியவில்லை. பிறகு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்திருந்த நிலையில், ஷாருக்கான் நடித்த ‘டங்கி’, பிரபாஸ் நடித்த ‘சலார்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்திருப்பதால், ‘மேரி கிறிஸ்துமஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் மாற்றினர். அதன்படி, வரும் ஜனவரி 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது. ராம் ராகவன் இயக்கியுள்ளார். இவர், 2018ல் இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தை இயக்கியவர். பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப், இதற்கு முன்பு தமிழில் நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார். தற்போது ‘மேரி கிறிஸ்துமஸ்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

The post கோலிவுட்டில் அறிமுகமாகிறார் கேத்ரினா கைஃப் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: