அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போண்டா மணியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்பட சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். போண்டா மணிக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
The post காமெடி நடிகர் போண்டா மணி காலமானார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.