பொக்ரானில் பீரங்கி பரிசோதனை

ஜெய்சல்மர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏடிஏஜிஎஸ் எனப்படும் நவீன ஹோவிட்சர் ரக பீரங்கி பரிசோதனை ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 2ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்டு அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. இந்திய ராணுவத்தின் பீரங்கிகளை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஒன்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டிஆர்டிஓ) இதனை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த ஹோவிட்சர் ரக பீரங்கியை டிஆர்டிஓ மேம்படுத்தி உள்ள நிலையில், பாரத் போர்ஜ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இவற்றை ராணுவ உபயோகத்திற்காக வருங்காலங்களில் உற்பத்தி செய்ய உள்ளன. இதனால், போபர்ஸ் ஹோவிட்சர்களுக்கு பதிலாக இந்திய ராணுவ பீரங்கிகளின் படை வரிசையில் இந்த ரக பீரங்கிகள் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post பொக்ரானில் பீரங்கி பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: