சென்னை: தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகளவில் ஆபாச வீடியோக்களை அனுப்பி மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். பிரபல நடிகை தேவையானியின் சகோதரர் நகுல் (37). நடிகரான இவர், பாய்ஸ், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். நல்ல பாடகரும் கூட. இவர் தன்னுடன் படித்த தோழி ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை காதலித்து 2016ல் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் நகுல் மனைவி ஸ்ருதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மர்ம நபர், ஆபாச வீடியோக்களை அனுப்புவதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். தொந்தரவு செய்யும் மர்ம நபர், முதல் முறையாக இல்லாமல் இதுபோல் பல முறை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோக்களும், கருத்துக்களையும் அனுப்பி வருகிறார் என கூறியிருந்தார். சம்பந்தப்பட்ட நபர் மீது ஸ்ருதி ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி ஸ்ருதிக்கு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பும் நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகரின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் மர்ம நபர் ஒருவர் தொந்தரவு செய்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
The post இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோ அனுப்பி மர்ம நபர் தொந்தரவு: நடிகர் நகுல் மனைவி போலீசில் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.