இரணியல் அருகே கடையை உடைத்து பணம் திருட்டு-குருசடி பூட்டை உடைக்க முயற்சி

திங்கள்சந்தை : இரணியல் அருகே கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றனர். குருசடி பூட்டை உடைக்க முடியாததால் காணிக்கை பணம் தப்பியது.குமரி மாவட்டம் இரணியல் அருகே மேக்கோடு அடுத்த இலந்தன்விளையில்  திருக்குடும்ப தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமான குருசடி திங்கள்நகர் திக்கணங்கோடு  சாலை இலந்தன்விளை ஜங்ஷனில் அமைந்துள்ளது.  நேற்று காலை இந்த குருசடியின் பூட்டை மர்ம நபர்கள் இரும்பு கம்பி கொண்டு நெம்பி உடைக்க முயன்றிப்பது தெரியவந்தது.  பங்குப் பேரவையினர் மற்றும் அப்பகுதி மக்கள் குருசடி முன் குவிந்தனர். அப்போது குருசடி அருகில் டீ கடை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த மோயிசன் ராஜ் என்பவர் கடையை  திறக்க வந்தார். ஆனால் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்த நிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மேஜையில் இருந்த ₹   6 ஆயிரத்து முன்னூறு மற்றும் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது.  இதுகுறித்து மோயிசன்ராஜ் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.சம்பவ இடம் வந்த போலீசார் டீக்கடை திருட்டு மற்றும் குருசடியில் நடந்த திருட்டு முயற்சி இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.   சம்பவம் நடந்த கடைக்கு எதிரே உள்ள தனியார் வங்கியில் இருந்த மூன்று கண்காணிப்பு கேமராக்களில்  பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.₹ 21 ஆயிரம் தப்பியதுதிருட்டு முயற்சி நடந்த புனித ஜார்ஜியார் குருசடியில் நாளை (23ம் தேதி) திருவிழா நடைபெறுகிறது. இதையடுத்து திருக்குடும்ப ஆலய நிர்வாகிகள் குருசடியை திறந்து காணிக்கை பெட்டியைத் எடுத்துச் சென்று பணத்தை எண்ணினர். அப்போது ₹ 21 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருந்தது தெரியவந்தது. மர்ம நபர்கள் குருசடியின் பூட்டை உடைக்க முடியாததால் இந்த காணிக்கை பணம் ₹21 ஆயிரமும் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது. நெய்யூர் பேரூராட்சி அலுவலகம் காக்காபொன்குளம்  அருகில் உள்ள மெயின் ரோட்டில் கடையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் திருடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 19ம் தேதி அதிகாலை 2.41 மணியளவில்  மர்ம நபர் ஒருவர் பைக்குகள் நிறுத்தப்பட்டிந்த பகுதிக்கு வருகிறார். நீல நிற லுங்கியும், சந்தன கலர் முழுக்கை சட்டையும் அணிந்து இருக்கும் அந்த மர்ம நபர் ஒரு கையில் பாட்டிலும் மற்றொரு கையில் ஏதோ ஒரு ஆயுதமும் வைத்துள்ளார். சுமார் 10 நிமிடங்கள் பைக் அருகில் உட்கார்ந்திருந்து பெட்ரோலை திருடிவிட்டு சாவகாசமாக நடந்து செல்கிறார். இதேநாள் பெட்ரோல் திருட்டு நடந்த கடைக்கு எதிரே உள்ள மரக்கடையில் கடையை திறந்து வைத்து தூங்கிக்கொண்டு இருந்த குமரேசனிடம் இருந்து செல்போன் மற்றும் ₹150 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post இரணியல் அருகே கடையை உடைத்து பணம் திருட்டு-குருசடி பூட்டை உடைக்க முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: