ஆன்லைன் பண மோசடி சம்பவங்கள்: எச்சரிக்கை

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் எலிசா என்பவர் செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்த போது பணம் திருடப்பட்டுள்ளது. எலிசா வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர் ஸ்வேதா கோஸ்வங்கி கணக்கில் இருந்து ரூ. 1.70 லட்சம் திருடப்பட்டுள்ளது. வில்லிவாக்கத்தில் லிங்கை கிளிக் செய்த பன்னீர்செல்வம் என்பவரின் வங்கி கணக்கிலிருந்து 63 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. சென்னை கோயம்பேட்டில் மகேஷ் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது.

The post ஆன்லைன் பண மோசடி சம்பவங்கள்: எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: