சென்னை : தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தென்தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென்தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 23ம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 24ம் தேதி தென்தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏற்காடு (சேலம்), தாளவாடி (ஈரோடு), டேனிஷ்பேட்டை (சேலம்), சாந்தி விஜயா பள்ளி, மசினகுடி (நீலகிரி) தலா 1 செமீ பதிவாகியுள்ளது. அதேசமயம் மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …
The post தென்தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!! appeared first on Dinakaran.
