பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை :மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பூர் : பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் நவரசம், வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் இந்த இளைஞர் 2020ம் ஆண்டில் தனது வீட்டின் அருகே வசிக்கும் பள்ளி சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வீடியோ எடுத்து வைத்து கொண்டு வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்றும மிரட்டியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் நவரசத்தை கைது செய்த போலீசார், போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை சிறையில் அடைத்தனர். திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நவரசத்திற்கு 70 ஆண்டுகள் சிறையும் 40,000 ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.  …

The post பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை :மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: