கார் மீது பஸ் மோதி பெண் வக்கீல், மகள் பலி

திருவெறும்பூர்: கரூர் கோசூர் தொண்டைமாங்கனம் சந்தையூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (43)- பழனியம்மாள் (42) வக்கீல் தம்பதியர். இவர்கள், மகள் சாதனா (14), மகன் எஸ்வந்த் (3) மற்றும் உறவினர்கள் விசுவநாதன் (43), தமிழ்செல்வி (38), கிருத்திகா(25) ஆகிய 7 பேர் குரு பெயர்ச்சியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி கோயிலுக்கு நேற்று காரில் சென்றனர். திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் சுங்கச்சாவடி அருகே, கார் மீது திருச்சியில் இருந்து தஞ்சை சென்ற அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பழனியம்மாள், சாதனா ஆகியோர் இறந்தனர். மற்ற 5 பேரும் காயத்துடன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்….

The post கார் மீது பஸ் மோதி பெண் வக்கீல், மகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: