ஆளுநர் மூலமாக மாநிலங்களில் ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கண்ணூர்: கேரளா மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஒன்றிய – மாநில உறவுகள் என்னும் தலைப்பில் முதல்வர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; மார்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றுள்ளதற்கு பினராயி விஜயனின் நட்பும் ஒரு காரணம். இந்திய முதலமைச்சர்களிலேயே சிங்கம் பினராயி விஜயன். இந்திய முதலமைச்சர்களில் மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் பினராயி விஜயன். எனக்கு வழிகாட்டும் முதலமைச்சராக பினராயில் விஜயன் திகழ்கிறார். கேரளாவில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார் முதலமைச்சர் பினராயி விஜயன். மார்க்சிஸ்ட் தொண்டர்கள் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த தியாக பூமிதான் கண்ணூர். செக்கிழுத்த செம்மல் வஉசி கண்ணூர் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.21,000 கோடி நிதி வர வேண்டி உள்ளது. மாநிலங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்குவதே இல்லை. இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே மதம் என்றாக்க முயற்சி நடக்கிறது. ஒன்றிய – மாநில உறவுகள் குறித்து பேச தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் உரிமை உண்டு. நானோ, பினராயி விஜயனோ தலையாட்டி பொம்மைகளாக இருந்தால், நம் ஆட்சிக்கு எந்த நெருக்கடியும் தர மாட்டார்கள். மாநிலங்களை ஒருங்கிணைத்து நாம் போராட வேண்டும்.. போராட தயாராக இருக்க வேண்டும். 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் விளக்கு மசோதாவை இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தாமதிக்கிறார் ஆளுநர். நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு நாட்டு மக்களையே பழிவாங்குகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் இருக்கும்போது ஆளுநர்கள் மூலம் ஆட்சிபுரிய நினைக்கிறது ஒன்றிய அரசு எனவும் குற்றம் சாட்டினார்….

The post ஆளுநர் மூலமாக மாநிலங்களில் ஆட்சி செய்ய நினைப்பது முறையல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: