விருதுநகர் பெண் பலாத்கார வழக்கு கைதானவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை

விருதுநகர்: விருதுநகரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்கள் என  8 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி, சிறப்பு அதிகாரியாக சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஆகியோரை நியமனம் செய்து, தமிழக டிஜிபி நேரடியாக கண்காணிக்க முதல்வர் உத்தரவிட்டார்.  விருதுநகரில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி எஸ்பி முத்தரசி, சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் வினோதினி, சரவணன் ஆகியோர், விருதுநகர் சமூக நலத்துறையின் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தங்கியுள்ள பெண் மற்றும் அவரது தாயாரிடம் நேற்று முன்தினம் 4 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்த பின் இரவு பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடு, பாலியல் கொடுமை நடந்த மருந்து குடோனில் ஆய்வு நடத்தினர். நேற்று சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி, ராஜகுமாரி, சாவித்திரி ஆகியோர் தலைமையில் 3 குழுக்கள் அமைத்து, வழக்கில் கைதான ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது ஆகிய 4 பேரின் வீடுகளுக்கு சென்று, அங்கிருந்த செல்போன், கம்யூட்டர்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து பக்கத்து வீடுகளில் வசிப்போரிடமும் விசாரணை நடத்தினர்….

The post விருதுநகர் பெண் பலாத்கார வழக்கு கைதானவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: