ஹிஜாப் விவகாரம் மங்களூருவில் பந்த்

மங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மங்களூருவில் உள்ள முஸ்லீம் வணிகர்கள் கடைகளை அடைத்து பந்த்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநிலத்தில், பள்ளி கல்லூரிகளுக்கு சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது குறித்து வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் பள்ளி கல்லூரிகளுக்கு மதம் சார்ந்த உடைகளை அணிந்துவரக்கூடாது என தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலத்தில் பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு ெதரிவித்து முஸ்லீம் அமைப்புகள் மாநிலம் தழுவிய முழு பந்த்க்கு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், மங்களூருவில், வணிகர்கள் கடைகளை அடைத்துள்ளனர். சிறுபான்மை வகுப்பினர் மட்டுமின்றி அனைத்து சமூகத்தினருக்கு சொந்தமான கடைகள், ஒட்டல்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் சிறுபான்மை வகுப்பினருக்கு சொந்தமான  பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் இயங்கவில்லை. எஸ்டிபிஐ, முஸ்லிம் மத்திய கமிட்டி, உல்லல் தர்கா கமிட்டி, முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, மகளிர் இந்திய இயக்கம், மங்களூரு கப்பல்துறை புதிய மீன் விற்பனையாளர்கள் மற்றும் கமிஷன் முகவர்கள் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் பந்த் அழைப்புக்கு ஆதரவு அளித்துள்ளன. பந்தர், குற்றோளி, ஸ்டேட் பாங்க் ரோடு, மார்க்கெட் ரோடுகளில்  வியாபாரம் முடங்கியது….

The post ஹிஜாப் விவகாரம் மங்களூருவில் பந்த் appeared first on Dinakaran.

Related Stories: