விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்தர திருவிழாவை ஒட்டி தேரோட்டம்: தேரை வடம்பிடித்து இழுத்து வரும் திரளான பக்தர்கள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்தர திருவிழாவை ஒட்டி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் உள்ள மலைமீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்,  அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாைவை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாட்களில் தினமும் மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறும். விழாவின் சிகரமான கருதப்படும் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. 18 ஆம் தேதி தீர்த்தவாரி, தபசு நிகழ்ச்சியும், 19 தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பொம்மபுர ஆதீனத்தின் இருபதாம் பட்டம் சுவாமிகள் தலைமையிலான திருமடத்தினர் செய்து வருகின்றனர்….

The post விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்தர திருவிழாவை ஒட்டி தேரோட்டம்: தேரை வடம்பிடித்து இழுத்து வரும் திரளான பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: