பண்ணாரி அம்மன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி: கம்ப ஆட்டம் ஆடி பெண் பக்தர்கள் உற்சாகம்

சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 7ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன்  சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவுடன் திருவீதியுலா முடிவு பெற்று அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை பண்ணாரி அம்மன் கோயில் முன்பு நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோயிலுக்கு முன்பு குழி அமைத்து அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து விறகுகளால் தீயிடப்பட்டது. இதையடுத்து பண்ணாரி அம்மனுக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டதை தொடர்ந்து குழிதோண்டி அமைக்கப்பட்ட நிலக் கம்பத்தை சுற்றிலும் மேளதாளம் முழங்க பக்தர்கள் கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். விழாவில் பங்கேற்ற பெண் பக்தர்களும் கம்ப ஆட்டம் ஆடினர். பண்ணாரி அம்மன் கோயிலில் விடிய விடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  தினமும் இரவு  கோயில் முன்பு நிலக்கம்பத்தை சுற்றிலும் மலை கிராம மக்களின் மீனாட்சி வாத்தியம் மற்றும் மேளதாளம் முழங்க பக்தர்களின் கம்ப ஆட்டம் நடைபெறும். 21 மற்றும் 22ம் தேதிகளில் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெறுகிறது….

The post பண்ணாரி அம்மன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி: கம்ப ஆட்டம் ஆடி பெண் பக்தர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: