ஐபிஎல்லுக்காக வங்கதேச டெஸ்ட் தொடரில் விலகும் தெ.ஆ.வீரர்கள்

கேப்டவுன்: 15 சீசன் ஐபிஎல் தொடர் வரும் 26ம்தேதி தொடங்குகிறது. அந்த நேரத்தில் தென்ஆப்ரிக்கா சொந்த மண்ணில் வங்கதேசத்துடன் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. முதல் டெஸ்ட் மார்ச் 31 முதல் ஏப் 4ம் தேதி வரையும், 2வது டெஸ்ட் ஏப்.8-12 வரையும் நடைபெற உள்ளது. இதனால் தென்ஆப்ரிக்க வீரர்களில் ஐபிஎல்லில் முதல் போட்டியில் இருந்து பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் வங்கதேச டெஸ்ட் தொடரில் இருந்து விலகி ஐபிஎல்லில் விளையாட ரபாடா, நார்ட்ஜே, மார்கோ ஜான்சன், வான் டெர் டுசென், லுங்கிநிகிடி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இதனால் வங்கதேசத்திற்கு எதிராக அனுபவம் இல்லாத புதுமுக  வீரர்களுடன் தென்ஆப்ரிக்கா விளையாட உள்ளது. ஐபிஎல்லில் ரபாடா பஞ்சாப்,  நார்ட்ஜேடெல்லி, மார்க்ரம், ஜான்சன் சன்ரைசர்ஸ், வான்டெர்டுசன் ராஜஸ்தான் அணிக்காக ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது. …

The post ஐபிஎல்லுக்காக வங்கதேச டெஸ்ட் தொடரில் விலகும் தெ.ஆ.வீரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: