நாடு முழுவதும் பஞ்சாப் புரட்சி: கெஜ்ரிவால் கருத்து

பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று  ஆட்சியை பிடித்துள்ளது. இதை, டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து ஆடிப்பாடி கொண்டாடினர். இந்நிலையில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்  டிவிட்டரில் நேற்று வௌியிட்டுள்ள பதிவில், ‘இந்த புரட்சிகரமான தீர்ப்பு அளித்ததற்கு பஞ்சாப் மக்களுக்கு நன்றி,’ என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் பக்வந்த் சிங் மானுடன் நின்று கொண்டு வெற்றி சின்னத்தை காண்பிக்கும் புகைப்படத்தையும் அதில் இணைத்துள்ளார்.டெல்லியில் கட்சி தொண்டர்கள் மத்தியில்  கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘தேர்தலில் மிக பெரிய வெற்றியை கொடுத்ததன் மூலம்  கெஜ்ரிவால் தீவிரவாதி இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். முதலில் டெல்லி, தற்போது பஞ்சாப், இனி நாடு முழுவதும் இந்த புரட்சி கொண்டு செல்லப்படும். அரசியலில் அன்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். அப்படி இருந்தால் வரும் காலங்கள் இந்தியாவுக்கானதாக இருக்கும்,’’ என்றார்.  * பஞ்சாப் தேர்தலில்  ஆம் ஆத்மி வெற்றியை பறித்து கொண்டிருந்தபோது, அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுடன் டெல்லி  கன்னாட் பிளேசில் உள்ள அனுமார் கோயிலுக்கு சென்று  வழிபட்டனர்….

The post நாடு முழுவதும் பஞ்சாப் புரட்சி: கெஜ்ரிவால் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: