திருவனந்தபுரம்: துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஷபீர் கல்லரக்கல், செம்பன் வினோத் நடித்துள்ள ‘கிங் ஆப் கோதா’ என்ற பன்மொழி படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. இதில் கேங்ஸ்டர் வேடமேற்றுள்ள துல்கர் சல்மான் கூறுகையில், ‘தற்போது நான் 40 வயதை நெருங்கிவிட்டேன். இனிமேலும் ரொமான்டிக் ஹீரோவாக என்னால் நடிக்க முடியாது என்று உணர்ந்துள்ளேன்.
எனவேதான் இதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து, முதிர்ச்சியான கேரக்டர் களில் நடிக்க விரும்புகிறேன். ‘கிங் ஆப் கோதா’வில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது மிகவும் கடினம். இந்தப் படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. படத்தில் அந்த கேரக்டராகவே மாறி, அதுபோன்ற இடத்தில் இருப்பது சுவாரஸ்ய மாக இருக்கிறது’ என்றார்.
The post இனி ரொமான்ஸ் வேண்டாம்: துல்கர் சல்மான் அதிரடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
