பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் சிறந்த பெண் விவசாயிகள் கவுரவிப்பு

புதுச்சேரி : தவளக்குப்பத்தில் உள்ள பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் விவசாயிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பூரணாங்குப்பம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஜெயதுர்கா தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் அக்ரி கணேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரியின் உதவி பேராசிரியர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார்.இந்த விழாவில் தவளக்குப்பம், நல்லவாடு, ஆண்டியார்பாளையம், பூரணாங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த சிறந்த விவசாய பெண்மணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஜெயதுர்கா பேசுகையில், பெண்களின் அதிகாரத்துவம் பற்றியும் வருகிற காலகட்டங்களில் பெண் குழந்தைகள் எவ்வாறு துணிவுடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.விழாவில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பல கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதில், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பெண் விவசாய பெருமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி உதவிபேராசிரியர் தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றினார்.இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கல்லூரியின் பண்ணையில் மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள பயிர் திட்டமிடலை பார்வையிட்டார்….

The post பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரியில் சிறந்த பெண் விவசாயிகள் கவுரவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: