திருவள்ளூர் நகராட்சி பள்ளியில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலை பள்ளியில் நேற்று வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வகுப்பறைக்கு சென்று பள்ளி கட்டிடங்கள் உறுதித் தன்மையுடன் உள்ளதா என பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் நகராட்சி அங்கன்வாடி மையத்தை நேரில் ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்குவதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த மதிய உணவை எடுத்து சாப்பிட்டு சோதனை செய்தார். மேலும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதிய இட வசதி இன்றி தரையில் அமர்ந்து இருப்பதை அறிந்து விரைந்து மேஜை நாற்காலி வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது நகர செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன், நகர்மன்ற தலைவர் பா.உதயமலர் பொன்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் வி.இ.ஜான், டி.கே.பாபு, டி.செல்வகுமார், விஜயகுமார், அயூப் அலி, கு.பிரபாகரன், சாந்தி கோபி, நீலாவதி பன்னீர்செல்வம், பத்மாவதி ஸ்ரீதர், இந்திரா பரசுராமன், தனலட்சுமி சீனிவாசன், கமலி மணிகண்டன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்….

The post திருவள்ளூர் நகராட்சி பள்ளியில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: