சீர்காழி அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ வாக இருப்பவர் செந்தில்நாதன் (37). இவர் அள்ளிவிளாகம் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் (57) என்ற விவசாயியிடம் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து செல்வராஜ் நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி நேற்று முன்தினம் இரவு விஏஓ வீட்டிற்கு சென்ற செல்வராஜ், ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் செந்தில்நாதனை பிடித்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வழக்கு பதிந்து செந்தில்நாதனை கைது செய்தனர்….

The post சீர்காழி அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது appeared first on Dinakaran.

Related Stories: