ஓபிஎஸ், இபிஎஸ் வழிநடத்துகிறார்கள் அதிமுகவில் தலைமையே கிடையாது: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தடாலடி

மதுரை: ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக நிர்வாகிகள் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: ஜெயலலிதா இல்லாத நிலையில் முதல்முறையாக தேர்தலில், கூட்டணி இல்லாமல் அதிமுக தனித்து களம் கண்டது. அதிமுகவில் தலைமையே கிடையாது. கட்சியை வழி நடத்த மட்டும், தற்போது இருப்பவர்களை(ஓபிஎஸ், இபிஎஸ்) நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆலோசனை நடத்தி பேசி முடிவு எடுப்போம். அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை. வாக்களிக்க வேண்டிய மக்கள் வரவில்லை. பாஜ மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்கிறார். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். தமிழகத்தில் என்றுமே திமுக, அதிமுகதான் ஆட்சி செய்யும். மாற்றுக்கட்சி என யாரும் ஆள முடியாது. இவ்வாறு அவர் கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல் கட்சி நிர்வாகிகளிடையே மீண்டும் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த பேட்டி, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post ஓபிஎஸ், இபிஎஸ் வழிநடத்துகிறார்கள் அதிமுகவில் தலைமையே கிடையாது: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தடாலடி appeared first on Dinakaran.

Related Stories: