நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வட மாவட்டங்களில் சாதித்த திமுக: சரிந்தது பாமக செல்வாக்கு; அதிமுகவையும் கைகழுவிய மக்கள்

சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வட மாவட்டங்களில் திமுக சாதித்துள்ளது. அதே நேரத்தில் இந்த மாவட்டங்களில் பாமக செல்வாக்கு சரிந்து வருகிறது என்பதை இத்தகைய தேர்தல் நிரூபித்து காட்டியுள்ளது. மேலும், கடந்த முறை அதிமுக வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கூட திமுக வசம் வந்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்றுமுன்தினம் வெளியானது. இந்த தேர்தலில் 952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளையும், 4388 பேரூராட்சி வார்டுகளையும் திமுக கைப்பற்றியது. இதன் மூலம், 21 மாநகராட்சிகளிலும், நகராட்சி வார்டுகள், பேரூராட்சி வார்டுகளிலும் திமுக கூட்டணி தான் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளடக்கிய வடமாவட்டங்கள் அனைத்திலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி அரியலூர் நகராட்சி வார்டுகளில் திமுக 17 வார்டுகளிலும், அதிமுக 11 வார்டுகளிலும்,  பாமக 4 வார்டுகளிலும், பேரூராட்சியில் திமுக 14, அதிமுக 1 வார்டுகளிலும், பாமக 1 வார்டுகளிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகராட்சிகளில் திமுக 51 வார்டுகளிலும், அதிமுக 14 வார்டுகளிலும் வென்றுள்ளன. பாமக ஒரு வார்டுகளில் கூட வெற்றி பெறவில்லை. பேரூராட்சி வார்டுகளில் திமுக 61 வார்டுகளிலும், அதிமுக 10 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் திமுக 30  மாநகராட்சி வார்டுகளிலும், அதிமுக  6 வார்டுகளிலும், பாமக 3 வார்டுகளிலும், நகராட்சியை பொறுத்தவரையில், திமுக 118 வார்டுகளிலும், 23 வார்டுகளிலும், பாமக 3 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் திமுக 125 வார்டுகளிலும், அதிமுக 37 வார்டுகளிலும், பாமக 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி வார்டுகளில் திமுக 31 வார்டுகளிலும், அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், நகராட்சியில் திமுக 36 வார்டுகளிலும், அதிமுக 11 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. பாமக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. பேரூராட்சி வார்டுகளில் திமுக 30, அதிமுக 11 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி வார்டுகளில் திமுக 21 வார்டுகளிலும், அதிமுக 16 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், நகராட்சியில் திமுக 22 வார்டுகளிலும், அதிமுக 5 வார்டுகளிலும் வென்றன. பாமக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பேரூராட்சிகளில் திமுக 59 வார்டுகளிலும் அதிமுக 15 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநகராட்சி வார்டுகளில் திமுக 50 வார்டுகளிலும், அதிமுக 9 வார்டுகளிலும் வென்றன. பாமக ஒன்றில் கூற வெற்றி பெறவில்லை. நகராட்சிகளில் திமுக 72 வார்டுகளிலும், அதிமுக 21 வார்டுகளிலும் வென்றன. பாமக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பேரூராட்சிகளில் திமுக 50 வார்டுகளிலும், அதிமுக 29 வார்டுகளிலும், பாமக 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சேலத்தில் மாநகராட்சி வார்டுகளில் திமுக 47 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும் வென்றன. பாமக ஒன்றில் கூற வெற்றி பெறவில்லை. நகராட்சிகளில் திமுக 96 வார்டுகளிலும், அதிமுக 34 வார்டுகளிலும், பாமக 12 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி வார்டுகளில் திமுக 18, அதிமுக 13 வென்றுள்ளது. பாமக  ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. பேரூராட்சி வார்டுகளில் திமுக 102, அதிமுக 21, பாமக 12 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி வார்டுகளில் திமுக 69, அதிமுக 27, பாமக 4 வார்டுகளிலும், பேரூராட்சி வார்டுகளில் திமுக 85, அதிமுக 31, பாமக 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிகளில் திமுக 86 வார்டுகளிலும், அதிமுக 12 வார்டுகளிலும், பாமக 1 வார்டிலும், பேரூராட்சியில் திமுக 26 வார்டுகளிலும், அதிமுக 12 வார்டுகளிலும் வென்றுள்ளன. பாமக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் திமுக 35 வார்டுகளிலும், அதிமுக 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. பாமக ஒரு வார்டிலும் வெற்றி பெறவில்லை. நகராட்சிகளில் திமுக 85 வார்டிலும், அதிமுக 19 வார்டிலும், பாமக ஒரு வார்டிலும், பேரூராட்சியில் திமுக 70 வார்டிலும் அதிமுக 28 வார்டிலும், பாமக 2 வார்டிலும் வெற்றி பெற்றன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சிகளில் திமுக 110 வார்டிலும், அதிமுக 25 வார்டிலும், பாமக 8 வார்டிலும், நகராட்சியில் திமுக 57 வார்டிலும், அதிமுக 36 வார்டிலும், பாமக 4 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சி வார்டுகளில்  திமுக 44, அதிமுக 7, பாமக 1 வார்டிலும், நகராட்சியில் திமுக 36 வார்டுகளில், அதிமுக 10 வார்டுகளில் வென்றுள்ளன. பாமக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. பேரூராட்சி வார்டுகளில் திமுக 44, அதிமுக 10, பாமக 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி வார்டுகளில் திமுக 64, அதிமுக 14, பாமக 5 வார்டிலும், பேரூராட்சிகளில் திமுக 66 வார்டிலும், அதிமுக 19 வார்டிலும், பாமக 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி,  வட மாவட்டங்களில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களில் பெரும் செல்வாக்கு இருப்பதாக கூறி வரும் பாமக பெரும் சரிவை சந்தித்துள்ளது.பாமக தனித்து போட்டியிட்டு 7603 பேரூராட்சி வார்டுகளில் 73ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 3842 நகராட்சி வார்டுகளில் 48ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1373 மாநகராட்சி வார்டுகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாமகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் அனைத்தும் திமுக பக்கம் வந்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்தமாக வடமாவட்டங்களில் பாமக காணாமல் போய் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு வட மாவட்டங்கள் கைகொடுத்தன. தற்போதும் வட மாவட்டங்களில் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெற்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அங்கு திமுக இந்த முறை மொத்தமாக நகராட்சி மற்றும் பேரூராட்சி இரண்டையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வட மாவட்டங்களில் சாதித்த திமுக: சரிந்தது பாமக செல்வாக்கு; அதிமுகவையும் கைகழுவிய மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: