உ.பி. சட்டமன்ற தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!: பாஜகவிற்கு எதிரான அலை வீசும் உன்னாவ், லக்கிம்பூரில் ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!!

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 403 தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேச சட்டமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ரேபரேலி, லக்கிம்பூர் கெர்ரி, உன்னாவ், லக்னோ உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குபதிவில் 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முக்கிய தொகுதிகள் கொண்ட 4ம் கட்ட வாக்குபதிவில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் காலையிலேயே தனது வாக்கை செலுத்தினார். விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட லக்கிம்பூர், கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த உன்னாவ் மற்றும் காங்கிரசின் முக்கிய தொகுதியான ரேபரேலி உள்ளிட்டவை இன்று வாக்குப்பதிவை சந்திக்கும் முக்கிய இடங்களாக உள்ளன. பாஜகவிற்கு எதிரான அலை வீசும் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. …

The post உ.பி. சட்டமன்ற தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு தீவிரம்!: பாஜகவிற்கு எதிரான அலை வீசும் உன்னாவ், லக்கிம்பூரில் ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: