காட்பாடி ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர்: தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் இருந்து காட்பாடி வழியாக தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கஞ்சா உட்பட போதை பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது ரயில்களில் கடத்தப்படும் கஞ்சா உட்பட போதை பொருட்கள் ரயில்வே பாதுகாப்புப்படையின் சிறப்புக்குழுவினர், ரயில்வே போலீசாரால் கைப்பற்றப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 5.45 மணியளவில் காட்பாடி ரயில் நிலையம் வந்து நின்ற ஐதராபாத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் பெட்டியில் அனாதையாக கிடந்த சிறிய அளவிலான பார்சலை ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு குழுவினர் கைப்பற்றினர். அவற்றை சோதித்தபோது அந்த பார்சலில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை ரயிலில் கடத்திய ஆசாமியை தேடி வருகின்றனர்….

The post காட்பாடி ரயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: