நாடாளுமன்ற யூடியூப் சேனல் திடீர் முடக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை நிகழ்வுகளை ஒளிபரப்பிய இரண்டு தொலைக்காட்சிகளும் ஒன்றிணைக்கப்பட்டு சன்சாத் டிவி என்ற பெயரில் புதிய சேனல் மூலம் நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், சன்சாத் தொலைக்காட்சியின் யூடியூப் சேனல் திடீரென முடக்கப்பட்டுள்ளது. யூடியூப் நிர்வாகத்தின் சமூக வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் சேனல் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சன்சாத் டிவியின் யூடியூப் சேனலின் ஸ்கீரின்ஷாட்களில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் இந்த சேனல் ஹேக் செய்யப்பட்டு கிரிப்டோகரன்சியான ‘எதிரியம்’ என மறு பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இந்த பிரச்னை குறித்து கூகுளிடம் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post நாடாளுமன்ற யூடியூப் சேனல் திடீர் முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: