ஏர் இந்தியாவுக்கு புதிய சிஇஓ

மும்பை: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இல்கர் அய்சி நியமித்து டாடா சன்ஸ் அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை சமீபத்தில் டாடா சன்ஸ் குழுமம் வாங்கியது. இந்நிலையில், டாடா சன்ஸ் குழு வாரிய குழு கூட்டம் நேற்று நடந்தது.  சிறப்பு விருந்தினராக டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் ஏர் இந்தியா ஏர்லைன்சின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக துருக்கி ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவர் இல்கர் அய்சி நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டாடா சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏர் இந்தியா ஏர்லைன்சின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இல்கர் அய்சி நியமிக்கப்பட்டுள்ளார்,’ என்று கூறப்பட்டிருந்தது….

The post ஏர் இந்தியாவுக்கு புதிய சிஇஓ appeared first on Dinakaran.

Related Stories: