மாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சி காமாட்சியம்மன் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் சிறப்பாக நடத்தப்படும். இதையெட்டி, இந்தாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தங்க மான், சந்திரப்பிரபை, யானை, ஹம்ஸ வாகனம், நாகம், தங்கக் கிளி, குதிரை, வெள்ளிரதம், தங்க சிம்மம், சூரிய பிரபை, தங்க பல்லக்கு, முத்து சப்பரம், சரபம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி காமாட்சி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் நேற்று காலை விமரிசையாக நடந்தது. இதையொட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் காமாட்சி அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீ காரியம் சுந்தரேசன், மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, கோயில் செயல் அலுவலர். தியாகராஜன் ஆகியோர் செய்தனர். விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண விளக்குகள், வண்ணமலர் சங்கிலிகள், கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. …

The post மாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சி காமாட்சியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: